கிருஷ்ணகிரி

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கிருஷ்ணகிரி

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி

வென்றவர்: கே.பி. முனுசாமி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 89776

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: சையது கியாஸ் உல் ஹக் (காங்)

பெற்ற வாக்குகள்: 60679

அதிமுக அமைச்சர் கே.பி. முனுசாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள தொகுதியாக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி ஆய்வு முடிவுகளில் வெளிப்படுகிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கே.பி .முனுசாமி தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்

• வேலைவாய்ப்பு

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• குடிநீர் விநியோகம்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் .

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

SCROLL FOR NEXT