வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் செய்பவர்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 50 காசுகள் தள்ளுபடி கிடைக்கும்.
டெல்லி, நொய்டா, குர்கான், ரோடாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 67 பங்க்குகள் இந்த தள்ளுபடியை வழங்கவுள்ளன.
வாக்களித்துவிட்டு விரலில் மை அடையாளத்துடன் வரும் வாகன ஓட்டிகள் தங்கள் கார், இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்டால், அவர்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 50 காசுகள் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த திட்டம் வரும் 10-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே இருக்கும் என அகில இந்திய பெட்ரோலியம் வர்த்தகர்கள் சங்க பொதுச் செயலாளர் அஜய் பன்சால் கூறினார்.