கடலூர் தொகுதி எம்.பி. கே.எஸ்.அழகிரியிடம் பேசியபோது, “ ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு ரூ. 400 கோடிவரை விவசாயக் கடன் பெற்றுத்தந்துள்ளேன். கடலூர் மாவட்ட ஆற்றங்கரைகளைப் பலப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் ரூ.300 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இழுபறியில் இருந்த கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைப் பணியை முடுக்கிவிட்டுள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் கிராமங்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.