சிவகங்கை

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

ப.சிதம்பரத்தின் அலுவலகத்தில் கேட்டோம். “திருமயத்தில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெல் நிறுவனம் கொண்டு வரப்பட்டுள்ளது. முத்துப் பட்டியில் நறுமணப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனம் தொடங்கினோம். பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பிள்ளையார்பட்டியில் விவசாயிகளுக்கான சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 30,000 விவசாயிகள் பலன் பெறுகின்றனர். காரைக்குடியில் கனரா வங்கி சார்பில் கைவினைக் கலைஞர்களுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 94 முறை தொகுதிக்கு வந்து சுற்றுப்பயணம் செய்துள்ளார்” என்றனர்.

SCROLL FOR NEXT