எட்டுக்குடி, சிக்கல், கீழ்வேளுர், வேளாங்கண்ணி, நாகூர், திருவாரூர், திருமறைக்காடு (வேதாரண்யம்), திருக்கொள்ளிக்காடு என்று பல் சமயத்தினருக்கும் ஆன்மிகத் தலங்களைத் தனது தனிச் சிறப்பாகக் கொண்டிருகிறது. இந்தத் தொகுதி தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூர், நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் இருக்கிறது.