காஞ்சிபுரம்

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாத னிடம் கேட்டபோது, “சென்னை - காஞ்சிபுரம் இடையே இரண்டு ரயில்களைக் கொண்டுவந்துள்ளேன். 11,100 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 25 கட்டணத்தில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரம்வரை ரயிலில் பயணிகள் பாஸ் பெற்றுத்தந்துள்ளேன். கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில், ரூ. 2.40 கோடி செலவில் கலங்கரை விளக்கம் அமைத்துள்ளேன். செங்கல்பட்டில் ஒரு கோடி ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் போராடி, கல்விக் கடனுக்கான வட்டியை ரத்துசெய்துள்ளேன். செய்யூர் அனல் மின்நிலையத்துக்கு இழுபறியில் இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்றுத்தந்துள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT