மத்திய சென்னை

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

தயாநிதி மாறனிடம் பேசியபோது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.19 கோடி நிதியை பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ளேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்த வில்லிவாக்கம் மற்றும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலங்கள் ரூ. 9.25 கோடியில் விரிவுபடுத்தப்பட்டன.

இதையெல்லாம் நாடாளுமன்ற நிலைக்குழு நேரில் பார்வையிட்டு, இந்தியாவிலேயே எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் முதன்முதலாக பெருந்தொகையில் அமைக்கப்பட்ட நீண்ட மேம்பாலம் என்று பாராட்டியது. மேத்தா நகர் மற்றும் அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே கான்க்ரீட் நடை மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி, பூங்கா நகர் ரயில் நிலையத்தில் சுரங்க நடைபாதை, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி, சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பயணிகள் நிழற்கூரைகள் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT