எம்.பி. செம்மலையிடம் பேசினோம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியான 25 கோடி ரூபாயை முழுமையாகச் செலவிட்டுள்ளேன். மொத்தம் 500 திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 135 நபர்களுக்குப் பிரதமரின் நிதியில் புற்றுநோய், இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காகப் பல கோடி ரூபாய் பெற்றுத்தந்தேன். சேலம் மாநகரத் தனிக் குடிநீர்த் திட்டப் பணிகள் 85% முடிந்துள்ளன. இரும்பாலை - பூலாம்பட்டி 30 கிலோ மீட்டர் சாலை அமைக்க மத்திய அரசிடம் நிதி பெற்று, இரண்டு கட்டமாகப் பணிகள் முடிந்துள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக இரும்பாலை, தில்லை நகர் பகுதியில் இடத்தை ஆய்வுசெய்துவருகிறோம்” என்றார்.