அருள் - சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு.
தொகுதியில் மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கிவந்த போதிலும், அங்கு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. கட்டுமானப் பணியில் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. கடலூரில் மீன்பிடித் தொழில் வணிக நிறுவனங்கள் இல்லை.
சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டியை எடுத்துக்கொண்டால், முந்திரி, பலா விளைகின்றன. ஆனால், அந்தத் தொழிலில் மதிப்புகூட்டப்பட்ட வணிகம் செய்ய அங்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை. தொழில் வளர்ச்சிக்குத் திட்டங்கள் எதுவும் போடப்படவில்லை. பண்ருட்டி பகுதியில் வெள்ளைக் களிமண், கூழாங்கற்கள் போன்ற தொழில் வாய்ப்புகள் இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லை.
எனவே, இயற்கை வளம் சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட வேண்டும். கடற்கரையை ஒட்டியுள்ள மணல் திட்டுகள், சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கவும் திட்டங்கள் எதுவும் இல்லை.