நரேந்திர மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் 650 பேர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளனர்.
2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஒபாமா வுக்கு ஆதரவாக இவர்கள் நிதி திரட்டிக் கொடுத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. பாரத் விகாஸ் சர்வதேச இந்தியர் கள் என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்கள் பாரத் பரணி என்பவ ரது தலைமையில் இயங்கி வருகின்றனர். பரணி, சிகாகோவில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
குஜராத்தில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற் கொண்டுள்ளது குறித்து அவர் கூறியது: அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் மோடிதான் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அமெரிக்கா வில் ஒபாமாவுக்கு ஆதரவாக நிதி திரட்டினோம். இங்கு மோடிக்கு ஆதரவாரக நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறோம்.
இந்தியாவில் இப்போது ஒரே சிறந்த தலைவர் மோடிதான். மாநிலத்தில் அவர் மேற்கொண் டுள்ள வளர்ச்சிப் பணிகளே அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும்.
மோடி சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையாக நடந்து கொள் பவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, இது அரசியல் ரீதியாக மோடிக்கு எதிராக எழுப்பிவிடப்பட்டுள்ள பிரச்சாரம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத் துவதற்காக இவ்வாறு பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் மோடி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்பவராக இருக்கிறார் என்று பரணி பதிலளித்தார்.
ஒபாமாவுக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்ற கேள்விக்கு, இருவருமே தேச நலனுக்கு முதன்மையான முக்கியத்துவத்தை அளிக்கக் கூடியவர்கள் என்றார். தீவிர வாதம், விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்டவற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இப்பிரச்னைகளை ஒழிப் பவரையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவரையும் தேர்ந்தெடுங் கள் என்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகி றோம் என்றும் அவர் கூறினார்.
மோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது குறித்து பரணி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மோடிக்கு ஆதரவாக மட்டு மல்லாது, ஆந்திரப் பிரதேசம், கேரளம், உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதர வாகவும் இந்த அமைப்பினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின் றனர்.