விழுப்புரம்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

2009 தேர்தலுக்கு முன்பு திண்டிவனம் நாடாளுமன்றப் பொதுத்தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறு சீரமைப்பில் விழுப்புரம் தனித் தொகுதியாகியிருக்கிறது. வன்னியர்களுக்கு என்று தனிக் கட்சியாக தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தொடங்கிய ராமசாமி படையாச்சி இந்தத் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்றுள்ளார். 1951-ல் இவரது கட்சியின் ஆதரவால்தான் ராஜாஜி முதல்வராக ஆக முடிந்தது. இவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வரலாற்றுப் புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டை இந்தத் தொகுதியில்தான் உள்ளது. தேசிங்கு ராஜன் அதனை ஆண்டதாக ‘தேசிங்கு ராஜன் கதை’ கூறுகிறது.

SCROLL FOR NEXT