மத்திய சென்னை

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

ஆர். பாலமுருகன் - செயலாளர், சிவிக் எக்ஸ்னோரா அமைப்பு, அண்ணா நகர்.

திருமங்கலம், கோயம்பேடு நூறடி சாலை சந்திப்பு மேம்பாலப் பணிகள் மூன்றாண்டுகளுக்கு மேல் இழுபறியில் இருக்கிறது. ஓட்டேரி நல்லா மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் இணைப்பு சுரங்கப்பாதைப் பணிகளும் அப்படியே. மத்திய அரசின் நிதிப் பங்களிப்பில், ஓட்டேரி நல்லா கால்வாய் கரையில் சுவர் கட்டும் பணி நடக்கிறது என்றாலும், ஆக்கிரமிப்பு காரணமாகப் பல இடங்களில் சுவர் அமைக்க முடியவில்லை.

எஸ்.கே. முருகேஷ் - ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர், சி.பி.எம்.

கூவத்தில் ஒருபக்கம் சுகாதாரச் சீர்கேடு பிரச்சினை என்றால், மறுபக்கம் கூவம் சீரமைப்பு என்கிற பெயரில் கரையோரம் வசிக்கும் குடும்பங்களையும் நகரைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள். இப்போது மீதமுள்ளவர்களையும் வெளியேற்றத் துடிக்கிறார்கள். வரும் தேர்தலில் இந்தப் பிரச்சினையும் முக்கியமாக எதிரொலிக்கும்.

SCROLL FOR NEXT