விழுப்புரம்

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

எம். அப்துல் கனி - விழுப்புரம் நகரச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் :

கலை அரங்குகள் அமைக்க எம்.பி. நிதி ஒதுக்கிய அளவுக்குக் கூடுதல் பள்ளிக் கட்டிடங்களுக்கோ, அரசு அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கோ நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. விழுப்புரம் ரயில் சந்திப்பில் பயணிகளுக்குக் காத்திருக்கும் அறை வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதைக்கூட நிறைவேற்றவில்லை. மக்கள் பணிகளைவிடக் கட்சிப் பணியில்தான் எம்.பி. அதிக அக்கறை காட்டிவருகிறார்.

அம்மன் கருணாநிதி - தலைவர், விழுப்புரம் மாவட்டக் குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம். :

தேசிய நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து வசதி இருந்தாலும், இந்த மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. தொகுதிப் பக்கம் எம்.பி. வருவதும் கிடையாது. தொழிற் துறை சார்பில் நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்துக்கு அழைக்கக்கூட அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மத்திய அரசு குறு, சிறு தொழில்களுக்குப் பல திட்டங்களை அறிவித்தாலும் அதைத் தொகுதிக்குள் செயல்படுத்துவதில் எம். பி. அக்கறை காட்டவில்லை.

SCROLL FOR NEXT