ஈரோடு

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

ஏ. சரவணன் - பா.ஜ.க. பிரச்சார அணி மாநிலத் தலைவர்:

விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக எம்.பி. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். அதே நேரத்தில், பழனி - சாம்ராஜ் நகர் ரயில் திட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. தொகுதியில் மஞ்சள் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அதனை ஏற்றுமதித் தரத்துடன் கூடிய பவுடராக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வெளிநாட்டு வியாபாரிகள் ஈரோடு ஜவுளி வகைகளைக் கொள்முதல் செய்யும் வகையில் ஒரு மையம் தேவை. ஜவுளித் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி அளிக்கப் பயிற்சி மையம் வேண்டும்.

என்.கே.கே.பி.ராஜா - மாவட்டச் செயலாளர், தி.மு.க.

ஈரோடு தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை நிறைவேற்றுவதைவிட, ஏற்கெனவே அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தினாலே தொகுதி வளர்ச்சி பெறும். போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய சுற்றுச் சாலை, மேம்பாலங்கள், 80 அடி சாலைத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

SCROLL FOR NEXT