சந்திரமோகன் - மாநிலப் பொதுக்குழு உறுப்பினர், சி.பி.ஐ-(எம்.எல்)
2008-ம் ஆண்டு ஜிண்டால் நிறுவனம் கஞ்சமலையில் 75 லட்சம் டன் இரும்புத் தாது இருப்பதைக் கண்டறிந்தது. இதன்படி 10 ஆண்டுகளுக்குக் கஞ்சமலையில் இரும்புத் தாது எடுக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தத் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. நெய்வேலியிலிருந்து நிலக்கரி பெற்று, கஞ்சமலையிலிருந்து இரும்புத் தாது எடுத்தால், ஆயிரக் கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஆண்டுக்குப் பல நூறு ரூபாய் வருவாய் கிடைக்கும். எனவே, சேலம் இரும் பாலையை உருக்காலையாக மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேகா ப்ரியதர்ஷினி - தி.மு.க. முன்னாள் மேயர், சேலம் மாநகராட்சி.
சேலம் ரயில்வே கோட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது. சேலம் கோட்டத்திலிருந்து எழும்பூர் ரயில் இயக்கப் படுகிறது. தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள சேலம் ரயில்வே சந்திப்பு கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய வழித்தடமாக உள்ளது. எனவே, இங்கிருந்து புதிய ரயில்களை விட வேண்டும் என்ற கோரிக்கை புறக் கணிக்கப்படுகிறது. சேலம் - விருதாசலம் மார்க்கத்தில் பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் விட்டால் மக்கள் பயன் பெறுவார்கள்.