கள்ளக்குறிச்சி

இது எம் மேடை: தெற்கு வாய்க்காலை கோமுகி அணையுடன் இணையுங்கள்

செய்திப்பிரிவு

ஏ.எஸ்.ஏ. ராஜசேகர் - அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர், கள்ளக்குறிச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பொரவலூர் வரை தெற்கு வாய்க்கால் வருகிறது. இதன் மூலம் 48 ஏரிகள் நிரம்பி சுமார் 4,624 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைகின்றனர்.

இந்த வாய்க்காலை, குளத்தூர், அ.பாண்டலம், கா.செல்லம்பட்டு கிராமங்கள் வழியாக கோமுகி அணையுடன் இணைக்க வேண்டும் என்பது இந்த கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அவ்வாறு இணைத்தால், கோமுகி அணையின் நீர்மட்டமும் உயரும். மேலும், கிராமங்களில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு அதிகபட்சம் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் அமைத்தாலே போதுமானது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, கோமுகி ஆறுகளில் நீரைச் சேமிக்கத் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT