கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகத்தில் சில பகுதி மக்களின் போராட்டங்களால் ஜல்லிக்கட்டு விவகாரத்தை மாநில அரசும், மத்திய அரசும் இந்த ஆண்டும் மெத்தனமாகவே அணுகத் தொடங்கின.
ஆனால், இம்முறை சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ஆயுதங்களால் இணைந்து மெரினாவில் அறவழிப் போராட்டக் களம் கண்டது இளைஞர்கள், மாணவர்கள் படை. இதன் எதிரொலியாக, தமிழகமே போராட்டக் குரல் எழுப்பியது.
அதிர்ந்து போன மாநில அரசும், மத்திய அரசும் துரிதமாக செயல்பட்டு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உரிய வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தது.
அதேவேளையில், அரசியல் - அமைப்புகளை நம்பாமல், தன்னெழுச்சியாக திரண்டு சாதித்துக் காட்டிய இளைஞர்கள் படையினருக்குள் சரியான புரிதல்கள் சென்றடைவதிலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதிலும் சற்றே தடுமாற்றம் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவும், பின்னர் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டு, நிரந்தர தீர்வு வரும் வரை காத்திருப்பது என்று போராட்டக்காரர்கள் முடிவெடுத்ததும், இடையில் நடந்தவை அனைத்தும் வெளிப்படை.
ஒட்டுமொத்தமாக, இந்த 'மெரினா புரட்சி' நம் தேசத்துக்கு சொல்லும் செய்திதான் என்ன?
வாருங்கள் விவாதிப்போம் - உங்கள் பார்வையை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதியுங்கள்.