பொள்ளாச்சி

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

எம்.பி. சுகுமாரிடம் பேசினோம். “தென்னை விவசாயிகளுக்காக மத்திய அமைச்சர் சரத்பவாரிடம் பேசி இளநீர் காய்களை டெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநில நகரங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவுபெற்றதும் இங்கிருந்து தினசரி வட மாநிலங்களுக்குத் தென்னை ஏற்றுமதியாகும். அகல ரயில் பாதைத் திட்டத்தை முடிக்க 40 கோடி ரூபாய் தேவை. அதற்காக நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 31 ரூபாயாக இருந்த கொப்பரை விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிட்டுள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT