மத்திய சென்னை

இது எம் மேடை - கல்வி உரிமைச் சட்டம் என்னவாயிற்று?

செய்திப்பிரிவு

பிரின்ஸ் கஜேந்திர பாபு - சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வியில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் சர்வசிக்ஷ அபியான் கல்வித் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்காணித்து முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய சென்னை தொகுதியில், மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பள்ளி களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்குவது அவசியம். சச்சார் கமிட்டி அறிக்கைப்படி சிறுபான்மை மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

இதற்காக, சிறுபான்மை மாணவர்கள் பட்டியலை, பள்ளி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டிப்பாக வழங்க வேண்டும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டமும் நீர்த்துப்போய்விட்டது. தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தின் வரம்புக்குள் வரவில்லை.

SCROLL FOR NEXT