திருப்பூர்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

அண்ணாதுரை தனது அரசியல் குருவான தந்தை பெரியாரை வாழ்க்கையில் முதன்முதலாகச் சந்தித்த இடம் திருப்பூர். அதை நினைவுபடுத்தும் வகையில், இன்றும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு அண்ணா பெரியார் இணைந்து கூட்டாக நிற்கும் சிலைகள் காட்சியளிக்கின்றன. ஊரிலிருந்து கிளம்பி சென்னை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பிழைப்புத் தேடி அலைந்த தமிழகத்தின் ஒருவழிப் பாதையை மாற்றி அமைத்த ஊர் திருப்பூர். 2009 பிப்ரவரி 22-ல் தமிழகத்தின் 32-வது மாவட்டமாக உருவானது. கொடிகாத்த குமரனின் நினைவு மண்டபம் திருப்பூரில் அமையப்பெற்றுள்ள சிறப்பைக் கொண்டது.

SCROLL FOR NEXT