தா.மோ. அன்பரசன் - முன்னாள் அமைச்சர், தி.மு.க.
தமிழகத்திலேயே சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக இருப்பது காஞ்சிபுரம் தொகுதியில் தான். செங்கல்பட்டு, வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ரவுடிகளின் பிடியில் உள்ளன. இதனால், தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முடியவில்லை. இதனால், ஏராளமான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
சக்தி பெ. கமலாம்பாள் - முன்னாள் எம்.எல்.ஏ. (பா.ம.க.)
மற்ற தொகுதிகளை விட இங்கு மதுக் கடைகள் ஏராளம். இதனால், ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன. இளைஞர்கள் திசைமாறுகிறார்கள். சிறுசேரியில் மது போதையில் இருந்தவர்கள்தான் பெண் பொறியாளரைப் பலாத்காரம் செய்து கொலைசெய்துள்ளனர். சாலை விபத்துகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதற்கும் மதுதான் காரணம்.