எம்.பி.-யான எம். கிருஷ்ணசாமியிடம் பேசி னோம். “600 கோடி ரூபாயில் திண்டிவனம் - வந்தவாசி - செய்யாறு - ஆரணி - ஆற்காடு - நகரி புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
அதற்காகப் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியும், துறை அமைச்சரைச் சந்தித்தும் திட்டத்துக்காக 170 கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளேன். ஆனால், ரயில் பாதைக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள்.
இதனால், பணிகள் தடைபட்டுள்ளன. செஞ்சியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் பேசியதால், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மயிலம் அருகே கட்டேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வாங்கிக் கொடுத்தும், நிலத்தைக் கையகப்படுத்தாததால் திட்டம் தொடங்கவில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணி அருகே சம்புவராயநல்லூரில் ஓடும் கமண்டல நாகநதி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன” என்றார்.