தென் சென்னை

உங்க தொகுதி எப்படி இருக்கு? - மயிலாப்பூர்

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர்

வென்றவர்: ஆர். ராஜலட்சுமி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 80063

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.வி. தங்கபாலு (காங்)

பெற்ற வாக்குகள்: 50859

அதிமுகவின் வழக்கறிஞர் ஆர்.ராஜலட்சுமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அரசு ஊழியர்கள், பட்டதாரிகள், நடுத்தர வகுப்பு மக்கள் என்று பல சமுதாய மக்கள் நிறைந்த தொகுதி மயிலாப்பூர்.

மயிலாப்பூர் தொகுதியில் கிட்டத்தட்ட 74 சதவித மக்கள் சென்னை மாநகராட்சி குப்பை - கூளங்களை நேரத்துக்கு அள்ளுவதில்லை, பல இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப் படாததால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது என்பது மக்களின் புகார்.அதே போல குடிநீர் விநியோகம், மின் விநியோகம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பும் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

சாலை வசதிகள் ஓரளவு பரவாயிலை என்று கருத்து சொல்லியுள்ள இப்பகுதி குடியிருப்பு வாசிகள், வேலைவாய்ப்பு, அருகாமை பகுதிகளில் தரமான பள்ளி கல்லூரிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடு, சட்டம் ஒழுங்கு முதலானவை சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT