வானதி சீனிவாசன் - மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜ.க.
தென் சென்னை யில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். ஆனால், அரசு சார்பில் அவர்களுக்கு தரமான, பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இல்லை. அதேபோல் மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் குறைவே. இதனால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சோழிங்கநல்லூரில் தரமான சாலை, குடிநீர், கழிவுநீர் வடிகால்கள் இல்லை.
டி.கே. ராம்குமார் - வழக்கறிஞர், மயிலாப்பூர்
நிலத்தடி நீரைப் பாது காப்பதிலும், பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், சென்னையின் 40% குப்பைகள் சட்டவிரோதமாகத் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகின்றன. இதனால், சதுப்பு நிலப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டு, சுற்றுச்சூழலும் கெட்டுவிட்டது. பெருங்குடி பம்பிங் ஸ்டேஷன் மேம்படுத்தப்படாததால், அரைகுறையாகச் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், சதுப்பு நிலப் பகுதியில் விடப்படுகிறது. அரசு இதனைத் தடுக்க வேண்டும்.