ரிப்போர்ட்டர் பக்கம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

எம்.சண்முகம்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் செயல்பட அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப் பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசா ரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை மூடக் கோரி கடந்த மே 22-ம் தேதி தூத் துக்குடியில் நடந்த போராட்டத்தில் 13 பேர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இதை யடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகம் இயங்கிக் கொள்ளலாம். ஆனால், காப்பர் உற்பத்தி செய்யும் பகுதிக்குள் நுழையக் கூடாது. இதை அப்பகுதி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வேதாந்தா நிறு வனத்தின் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும் ஸ்டெர் லைட் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது செல்லாது என்றும் அறிவிக்கும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை அவசரமாக விசா ரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக தமிழக சார்பில் நேற்று முறையிடப்பட்டது.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் அடுத்த வாரம் விசா ரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

SCROLL FOR NEXT