இதர மாநிலங்கள்

மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்: மோடிக்கு எதிராக ராகுல் காட்டம்

செய்திப்பிரிவு

மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.

பிஹார் மாநிலம், கிசான்கன்ஞ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

குஜராத் வளர்ச்சி மாடல் நாட்டின் எல்லா பகுதிகளுக் கும் பொருந்தாது. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங் கள். குஜராத் வளர்சி மாடலை மிட்டாய் மாடல் அல்லது பலூன் மாடல் என்றும் அழைக் கலாம். டாடா, அதானி போன்ற பணக்காரர்களுக்காக பயன ளிக்கும் வகையில் பொதுப் பணத்தை சூறையாடுவதே இந்த மாடல். மோடி அடுத்த பிரதமராக வருவதற்காக பாஜக இந்த கருத்தை விற்பனை செய்து வருகிறது.

ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1 விலைக்கு தொழிலதிபர் அதானிக்கு நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இந்த 1 ரூபாய் ஒரு மிட்டாயின் விலை.

டாடா மோட் டார்ஸ் நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை தொடங்குவதற்கு மோடி ரூ.10 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளார். வங்கியில் 12 சதவீத வட்டிக்கு சாதாரண மனிதர்கள் கடன் பெற்றுவரும் நிலையில் இந்தத் தொகையை அவர் 0.1% வட்டிக்கு தந்துள்ளார்.

ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40 ஆயிரம் உதவி அளிக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் பிற நலத் திட்டங்களுக்கு குஜராத் அரசின் செலவு இந்த ரூ.10 ஆயிரம் கோடியை விட குறைவு.

குஜராத்தில் 40 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் ஒரு நாள் வருமானம் 11 ரூபாயை விட குறைவு. குஜராத் வளர்ச்சியில் தன்னைத் தவிர வேறு யாரின் பங்களிப்பும் இல்லை என்று மோடி கூறுகிறார். நாட்டின் எல்லா பகுதிகளின் வளர்ச்சிக்கும் மோடி இனி இதையே கூறுவார்” என்றார் ராகுல்.

பிஹாரில் ராகுலின் இரண்டா வது பொதுக்கூட்டம் இது. இதற்கு முன் அவுரங்காபாத்தில் கடந்த 1-ம் தேதி அவர் பேசினார்.

SCROLL FOR NEXT