விவாதக் களம்

தி இந்து ஆன்லைன் வாசகர்கள் கவனத்துக்கு..!

செய்திப்பிரிவு

அன்புள்ள வாசகர்களே...

நூற்றாண்டு கடந்து பாரம்பரியம் கொண்ட 'தி இந்து' நிறுவனம் புதிதாக ஒரு நாளிதழைத் தமிழில் தொடங்க வேண்டும் என்கிற சவாலை ஏற்றுக்கொண்டபோது, எங்கள் குழுவினரிடம் இருந்தது கட்டுகளற்ற உற்சாகமும் காலமறியாத உழைப்பும் மட்டுமே.

கடந்த வருடம் செப்டம்பர் 16-ல் 'தி இந்து' தமிழ் நாளிதழ் உதயமான அதே தினத்தில், அதன் இணையப் பதிப்பும் தொடங்கப்பட்டது. முதல் பிறந்தநாளை எட்டுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், 'தி இந்து' ஆன்லைன் உடனான உங்களின் அனுபவத்தை அத்தனை வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

'தி இந்து' இணையதளம் குறித்த உங்கள் பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில், இன்னும் எங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? அதற்கான யோசனைகளையும் அன்போடு எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் விமர்சனத்தையும் யோசனைகளையும் வழக்கம்போல் கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பகிருங்கள். அவை இதே பக்கத்தில் வெளியிடப்படாது. மாறாக, உங்கள் கருத்துகள் அப்படியே தொகுக்கப்பட்டு, 'தி இந்து' தமிழ் நாளிதழின் அச்சுப் பதிப்பில் வெளியிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (உங்கள் பெயர், ஊர் விவரத்தைக் குறிப்பிடத் தவறாதீர்.)

ஒரு வருடப் பயணத்தை ஒன்றாகத் திரும்பிப் பார்ப்போம். இரண்டாம் ஆண்டின் இனிய தொடக்கத்தையும் இணைந்தே திட்டமிடுவோம்.

SCROLL FOR NEXT