ரிப்போர்ட்டர் பக்கம்

உயிர்காக்க ஒலிக்கும்: அசத்தும் ஆரம்ப சுகாதார நிலையம்

என்.முருகவேல்

வி

ழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ‘அபாய சங்கு’ ஒலித்தது. ஊழியர்கள் அவசரமாக பிரசவ வார்டுக்கு ஓடினர்.

பிறகு ‘அபாய சங்கு’ ஒலிப் பது நின்றது. சில நிமிடங்கள் கழித்து வந்த செவிலியரிடம் கேட்டோம். “ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது. அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அனைவரும் அங்கு சென்று மருத்துவருக்கு உதவி னோம்’’ என்றார்.

அதற்கும் அபாயசங்கு ஒலித்தற்கும் என்ன தொடர்பு என யோசித்தோம்.

பின்னர், பிரசவம் முடிந்து வெளியே வந்த வட்டார மருத் துவ அலுவலர் பொன்னரசுவிடம் ‘அபாய சங்கு’ பற்றி கேட்டோம். “இதை அபாய சங்குன்னு சொல்லாதீங்க உயிர் காக்கும் சங்குன்னு சொல்லுங்க’’ எனக்கூறி விளக்கினார்.

“பிரசவத்துக்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணுக்கு அவசர நேரத்தில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் ஓடி வந்து உதவவே இதை அமைத்திருக்கிறோம். அந்த நேரத்தில் செல்போனை பயன்படுத்தி ஒவ்வொருத்தராக அழைப்பதற்கு நேரம் இருக்காது. சங்கொலி கேட்டு ஓடி வருவோம். இதன்மூலம் தாய், சேய் இருவரும் பாதுகாக்கப்படுவர். தேவையற்ற தாமதத்தை தவிர்க்கலாம்’’ என்றார் .

இது மருத்துவ தேவைக்கு மட்டுமல்ல. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நுழைந்தோலோ அல்லது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ இந்த சங்கை ஒலித்தால் போதும். அருகில் இருக்கும் காவல் நிலைய போலீஸார், ஊழியர்களும் வந்து உரிய பாதுகாப்பு அளிக்க முடியும்.

சில கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகளில் இதுபோன்ற வசதி இருந்தாலும், ஒரு அரசு மருத்துவமனையில் அதுவும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமயோஜிதமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை பாராட்டலாம். தூய்மையாகவும் மருத்துவமனை இருக்கிறது. சுத்தம் கூட நோய்க்கு மருந்துதானே.

SCROLL FOR NEXT