விழுப்புரம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

பெருமளவு விவசாயப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதி நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதி. தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் இவை.கரும்பு விவசாயம் நடைபெறுவதால், அதிகமான கரும்பு ஆலைகளும் இந்த பகுதியில் உள்ளன. இவற்றை தவிர பெரிய அளவில் தொழிற்சாலைகள் இங்கு இல்லை.

இந்த பகுதி அரசியலை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த தொகுதி இது. சமீபகாலமாக திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டு வருகின்றன.

மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய செஞ்சி ராமச்சந்திரன் இரண்டுமுறை எம்.பி.யாக இருந்த தொகுதி இது. பாமகவும் வென்ற தொகுதி இது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக மாறியுள்ளது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத்  தொகுதிகள்

விழுப்புரம்

வானூர் (எஸ்சி)

திண்டிவனம் (எஸ்சி)

திருக்கோயிலூர்

உளுந்தூர்பேட்டை

விக்கரவாண்டி

தற்போதைய எம்.பி

2014    ராஜேந்திரன், அதிமுக

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்

கட்சி    வேட்பாளர்  வாக்குகள்
அதிமுக ராஜேந்திரன்   482704
திமுகமுத்தையன்289337
தேமுதிகஉமாசங்கர்209663
காங்ராணி   21461
சிபிஎம்ஆனந்தன்17408

முந்தைய தேர்தல்கள்

திண்டிவனம் தொகுதி

ஆண்டு    வென்றவர்

1971  லட்சுமி நாராயணன், காங்

1977   லட்சுமி நாராயணன், காங்

1980   ராமசாமி படையாச்சி, காங்

1984   ராமசாமி படையாச்சி, காங்

1989  எஸ்.எஸ். ராமதாஸ், காங்

1991  வாழப்பாடி  ராமமூர்த்தி, காங்

1996  ஜி.வெங்கட்ராமன், திமுக

1998  செஞ்சி ராமசந்திரன், மதிமுக

1999  செஞ்சி ராமசந்திரன், மதிமுக

2004  தன்ராஜ், பாமக

விழுப்புரம் (தனித்தொகுதி)

2009  முருகேசன் ஆனந்தன், அதிமுக   

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

விழுப்புரம்           :   சி.வி. சண்முகம், அதிமுக

வானூர் (எஸ்சி)      : சக்ரபாணி, அதிமுக

திண்டிவனம் (எஸ்சி) : சீதாபதி, திமுக

திருக்கோயிலூர்      : பொன்முடி, திமுக

உளுந்தூர்பேட்டை    :  குமரகுரு, அதிமுக

விக்கரவாண்டி       : ராதாமணி, திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வடிவேல் இராவணன் (பாமக)

ரவிக்குமார் (விசிக)

வானூர் என் கணபதி (அமமுக)

அன்பின் பொய்யாமொழி (மநீம)

பிரகலதா (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT