திருச்சி

திருச்சி மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

தமிழகத்தின் மையப்பகுதி நகரம் திருச்சி. திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன், புதுகோட்டை, கந்தவர்கோட்டை தொகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவை தொகுதி

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி. அவர் மட்டுமின்றி பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.

பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலம் இரண்டு முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பெருமளவு நகர்புறப்பகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.

தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இடதுசாரிக் கட்சிகள் இங்கு போட்டியிட்டு வென்றுள்ளன. திராவிடக்கட்சிகள் மட்டுமின்றி தேசியக்கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஎம்க்கும் சற்று வாக்கு வங்கி உள்ள தொகுதி. இதனால் பல தேர்தல்களில் இந்த தொகுதிகள் கூட்டணியில் தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

திருச்சி மேற்கு

திருச்சி கிழக்கு

ஸ்ரீரங்கம்

திருவெறும்பூர்

புதுக்கோட்டை

கந்தர்வக்கோட்டை

தற்போதைய எம்.பி

பி.குமார், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுககுமார்458478
திமுகஅன்பழகன்308002
தேமுதிகவிஜயகுமார்94785
காங்கிரஸ்சாருபாலா தொண்டைமான்51537
சிபிஎம்ஸ்ரீதர்17039

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971கல்யாணசுந்தரம், சிபிஐதங்கவேலு, காங்கிரஸ்
1977கல்யாணசுந்தரம், சிபிஐவெங்கடேச தீட்சிதர், காங்கிரஸ்
1980செல்வராஜூ, திமுகடி.கே.ரங்கராஜன், சிபிஎம்
1984அடைக்கலராஜ், காங்கிரஸ்செல்வராசு, திமுக
1989அடைக்கலராஜ், காங்கிரஸ்டி.கே.ரங்கராஜன், சிபிஎம்
1991அடைக்கலராஜ், காங்கிரஸ்டி.கே ரங்கராஜன், சிபிஎம்
1996அடைக்கலராஜ், தமாகா,கோபால், காங்கிரஸ்
1998ரங்கராஜன் குமாரமங்கலம்,பாஜக அடைக்கலராஜ், தமாகா
2001 இடைத்தேர்தல்தலித் எழில்மலை, அதிமுகசுகுமாரன் நம்பியார், பாஜக
2004எல்.கணேசன், மதிமுகபரஞ்சோதி, அதிமுக
2009பி.குமார், அதிமுகசாருபாலா தொண்டைமான், காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

திருச்சி மேற்கு : கே.என்.நேரு, திமுக

திருச்சி கிழக்கு : நடராஜன், அதிமுக

ஸ்ரீரங்கம் : வளர்மதி, அதிமுக

திருவெறும்பூர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக

புதுக்கோட்டை : பெரியண்ணன் அரசு, திமுக

கந்தர்வக்கோட்டை: ஆறுமுகம், அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வி.இளங்கோவன் (தேமுதிக)

சு. திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

சாருபாலா தொண்டைமான் (அமமுக)

ஆனந்தராஜா (மநீம)

வினோத் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT