மதுரை

மதுரை மக்களவைத் தொகுதி 

நெல்லை ஜெனா

தமிழகத்தில் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரமான மதுரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பல அரசியல் கட்சிகளும், மாநாடு, கூட்டம் என தங்கள் வலிமையை பறைச்சாற்றும் இடமாக மதுரை தொடர்ந்து விளங்கி வருகிறது. அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் மிக்க தொகுதி. ஒரு காலத்தில் கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக இருந்த

மதுரை தொகுதி சீரமைப்புக்கு பிறகு பெருமளவு நகரத்தை மட்டுமே கொண்ட தொகுதியாக மாறி இருக்கிறது.

மதுரையின் வெற்றி என்பது கட்சியின் வளர்ச்சிக்கு அடிகோலும் என்பதால் இதில் அனைத்து கட்சிகளுமே கவனம் செலுத்துகின்றன. அதுபோலவே குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவு தரும் தொகுதியாக இல்லாமல், அந்தந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப, தமிழகம், நாட்டின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தொகுதியாகவே மதுரை விளங்கியுள்ளது.

இடதுசாரி இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரைய்யா என பல ஜாம்பவான்கள் எம்.பி.யான தொகுதி இது. காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான கக்கன் களம் கண்ட தொகுதி. ஜனதா கட்சியின் சுப்பிரமணியின் சுவாமியும், போட்டியிட்டு வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியே இந்த தொகுதியில் அதிகம் வென்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இடதுசாரி கட்சிகள் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் வென்று முத்திரை பதித்தது அதிமுக. மறைந்த தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி 2009-ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் எம்.பி.யானார்.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

மதுரை வடக்கு      

மதுரை தெற்கு

மதுரை மேற்கு

மதுரை கிழக்கு

மதுரை மத்தி

மேலூர்

தற்போதைய எம்.பி

கோபாலகிருஷ்ணன், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுககோபாலகிருஷ்ணன்454167
திமுகவேலுசாமி  256731
தேமுதிகசிவமுத்துகுமார்147300
காங்கிரஸ்பரத் நாச்சியப்பன்32143
சிபிஎம்விக்ரமன்30108

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1980சுப்புராமன், காங்பாலசுப்ரமணியம், சிபிஎம்
1984  சுப்புராமன், காங்சங்கரைய்யா, சிபிஎம்
1989 ராம்பாபு, காங் வேலுசாமி, திமுக
1991ராம்பாபு, காங்மோகன், சிபிஎம்
1996ராம்பாபு, காங், தமாகாசுப்பிரமணியன் சுவாமி, ஜனதா
1998சுப்பிரமணியன் சுவாமிஜனதா ராம்பாபு, தமாகா
1999மோகன், சிபிஎம்பொன் முத்துராமலிங்கம், திமுக
2004மோகன், சிபிஎம்ஏ.கே. போஸ், திமுக
2009அழகிரி, திமுகமோகன், சிபிஎம்

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

மதுரை வடக்கு : ராஜன் செல்லப்பா, அதிமுக

மதுரை தெற்கு  : சரவணன், அதிமுக

மதுரை மேற்கு  : ராஜூ, அதிமுக

மதுரை கிழக்கு : மூர்த்தி, திமுக

மதுரை மத்தி   : பழனிவேல் தியாகராஜன், திமுக

மேலூர்         : பெரியபுல்லன் என்ற செல்வம், அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வி.வி.ஆர். ராஜ சத்யன் (அதிமுக)

சு.வெங்கடேசன் ( (சிபிஎம்)

டேவிட் அண்ணாதுரை (அமமுக)

அழகர் (மநீம)

பாண்டியம்மாள் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT