இந்தியாவின் நீண்டகாலம் முதல்வராக பதவி வகித்து வரும் பவன் குமார் சாம்லிங் மாநிலம் இது. மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் தற்போது நடைபெறவுள்ளது. இயற்கை விவசாயம் தொடங்கி, மின் உபரி மாநிலம், இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதி என பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் முதல்வர் பவன்குமார் சாம்லிங் மக்கள் தலைவராக விளங்கி வருகிறார். சிக்கிமில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் சாம்லிங்கை எதிர்க்க முடியவில்லை. வரும் தேர்தலிலும் இதே நிலை தொடரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (1) | வாக்கு சதவீதம் |
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 1 | 53 |
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 0 | 39.5 |
பாஜக | 0 | 2.4 |
காங்கிரஸ் | 0 | 2.3 |