ஆரணி

ஆரணி மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

நீண்டகாலமாக வந்தவாசி மக்களவை தொகுதியாக இருந்து வந்த இந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்புக்கு பின் 2009-ல் ஆரணி மக்களவை தொகுதியாக உருவெடுத்தது.

வந்தவாசி தொகுதியில் தொடக்காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களே இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளனர். கூட்டணியில் காங்கிரஸுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்படுவது வாடிக்கை. காங்கிரஸ் காலத்துக்கு பிறகும் அதிமுக, திமுக ஆகியவை இந்த தொகுதியை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்குவது வழக்கமாக இருந்துள்ளது. அதிமுக, திமுகவை தவிர பாமகவுக்கும் ஒரளவு வாக்கு வங்கி கொண்ட தொகுதி.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான கிருஷ்ணசாமி, பலராமன் போன்றோரும், பாமகவின் துரை, மதிமுகவின் செஞ்சி.ராமசந்திரன் போன்றோர் இத்தொகுதியில் எம்.பி.யாக இருந்துள்ளனர்.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

ஆரணி

வந்தவாசி

செய்யார்

போளூர்

செஞ்சி

மைலம்

தற்போதைய எம்.பி

ஏழுமலை, அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகஏழுமலை502721
திமுகசிவானந்தம்258877
பாமகஏ.கே.மூர்த்தி253332
காங்விஷ்ணு பிரசாத்27717

முந்தைய தேர்தல்கள்

வந்தவாசி

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1977வேணுகோபால், அதிமுகதுரைமுருகன், திமுக
1980பட்டுசுவாமி, காங்வேணுகோபால், அதிமுக
1984பலராமன், காங்பாண்டியன், திமுக
1989பலராமன், காங்வேணுகோபால், திமுக
1991கிருஷ்ணசாமி, காங்வேணுகோபால், திமுக
1996பலராமன், தமாகாகிருஷ்ணசாமி, காங்
1998துரை, பாமகபலராமன், தமாகா
1999துரை, பாமககிருஷ்ணசாமி, காங்
2004செஞ்சி ராமச்சந்திரன், மதிமுகராஜலட்சுமி, அதிமுக

ஆரணி தொகுதி

2009கிருஷ்ணசாமி, காங்சுப்பிரமணியன், அதிமுக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

ஆரணி : ராமசந்திரன், அதிமுக

வந்தவாசி : அம்பேத்குமார், திமுக

செய்யார் : மோகன், அதிமுக

போளூர் : சேகரன், திமுக

செஞ்சி : மஸ்தான், திமுக

மைலம் : மாசிலாமணி, திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

செஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக)

எம்கே. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)

செந்தமிழன் (அமமுக)

சாஜி( மநீம)

தமிழரசி (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT