நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பெரம்பலூர் தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாறியுள்ளது. திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வென்ற தொகுதி இது.
பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதியில் விவசாயம் மட்டுமே தொழில்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத் தொகுதியானதுடன், அதில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் வேறு தொகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
பெரம்பலூரை தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
பெரம்பலூர் (எஸ்சி)
துறையூர் (எஸ்சி)
லால்குடி
முசிறி
மண்ணச்சநல்லூர்
குளித்தலை
தற்போதைய எம்.பி
மருதராஜா, அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
| அதிமுக | மருதராஜா | 462693 |
| திமுக | சீமனூர் பிரபு | 249645 |
| பாஜக | பச்சமுத்து | 238887 |
| காங்கிரஸ் | ராஜசேகரன் | 31998 |
முந்தைய தேர்தல்கள்
| ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
| 1967 | துரையரசு, திமுக | ராமசாமி, காங்கிரஸ் |
| 1971 | துரையரசு, திமுக | அய்யாகண்ணு, ஸ்தாபன காங்கிரஸ் |
| 1977 | அசோக்ராஜ், அதிமுக | ராஜூ, திமுக |
| 1980 | மணி, காங்கிரஸ் | தங்கராஜூ, அதிமுக |
| 1984 | தங்கராஜூ அதிமுக | தியாகராஜன், திமுக |
| 1989 | அசோக்ராஜ், அதிமுக | பனவைகருந்தழன், திமுக |
| 1991 | அசோக்ராஜ், அதிமுக | ராமசாமி, திமுக |
| 1996 | ஆ.ராசா, திமுக | சுப்பிரமணியன் காங்கிரஸ் |
| 1998 | ராஜரத்தினம், அதிமுக | ஆ.ராசா, திமுக |
| 1999 | ஆ.ராசா, திமுக | ராஜரத்தினம், அதிமுக |
| 2004 | ஆ.ராசா, திமுக | சுந்தரம், அதிமுக |
| 2009 | நெப்போலியன், திமுக | பாலசுப்பிரமணியன், அதிமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
பெரம்பலூர் (எஸ்சி) : தமிழ்ச்செல்வன், அதிமுக
துறையூர் (எஸ்சி) : ஸ்டாலின்குமார், திமுக
லால்குடி : சவுந்தரபாண்டியன், திமுக
முசிறி : செல்வராசு, அதிமுக
மண்ணச்சநல்லூர் : பரமேஸ்வரி, அதிமுக
குளித்தலை : ராமர், திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
என்.ஆர். சிவபதி (அதிமுக)
டி.ஆர். பச்சமுத்து (ஐஜேக )
எம். ராஜசேகரன் (அமமுக)
அருள் பிரகாசம் (மநீம)
சாந்தி (நாம் தமிழர்)