தென்காசி

தென்காசி மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

தென் மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி இது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்துக்குள்ளாக இருந்தது.

அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது  இந்த தொகுதி.

நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வந்த இந்த தொகுதியில் 90களுக்கு பிறகே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் நீண்டகாலம் இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். தமாகா தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து தமாகாவில் இணைந்து அருணாச்சலம் எம்.பி.யானார். 

அதன் பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும், 2 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன. திமுக கூட்டணியில் இந்த தொகுதி வழக்கமாக கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

தென்காசி

கடையநல்லூர்

வாசுதேவநல்லூர் (எஸ்சி)

சங்கரன்கோவில் (எஸ்சி)

ஸ்ரீவில்லிபுத்தூர் (எஸ்சி)

ராஜபாளையம்

தற்போதைய எம்.பி

வசந்தி முருகேசன், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகவசந்தி முருகேசன்424586
புதிய தமிழகம்கிருஷ்ணசாமி  262812
மதிமுகசதன் திருமலைக்குமார்190233
காங்கிரஸ்ஜெயக்குமார்58963
சிபிஐலிங்கம்23528

முந்தைய தேர்தல்கள்

ஆண்டு   வென்றவர்   2ம் இடம்
1980  அருணாச்சலம், காங்ராஜகோபாலன், ஜனதா
1984அருணாச்சலம், காங்  கிருஷ்ணன், சிபிஎம்
1989அருணாச்சலம், காங்கிருஷ்ணன், சிபிஎம்
1991அருணாச்சலம், காங்சதன் திருமலைக்குமார், திமுக
1996அருணாச்சலம், தமாகாசெல்வராஜ், காங்
1998முருகேசன், அதிமுகஅருணாச்சலம், தமாகா
1999முருகேசன், அதிமுகஆறுமுகம், பாஜக
2004  அப்பாதுரை, சிபிஐ   முருகேசன், அதிமுக
2009பி.லிங்கம், சிபிஐவெள்ளபாண்டி, காங்

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

தென்காசி       : செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அதிமுக

கடையநல்லூர் : முகமது அபுபக்கர், ஐயுஎம்எல்

வாசுதேவநல்லூர் (எஸ்சி): மனோகரன், அதிமுக

சங்கரன்கோவில் (எஸ்சி): ராஜலட்சுமி, அதிமுக

ஸ்ரீவில்லிபுத்தூர் (எஸ்சி): சந்திரபிரபா, அதிமுக

ராஜபாளையம்:       தங்கபாண்டியன், திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

தனுஷ் எம். குமார் (திமுக)

ஏஎஸ் பொன்னுதாய் (அமமுக)

முனீஸ்வரன் (மநீம)

மதிவாணன் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT