கிருஷ்ணகிரி

கள நிலவரம்: கிருஷ்ணகிரி தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

கர்நாடக, ஆந்திர எல்லையையொட்டிய தொகுதி என்பதால், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி.

தேர்தலில் இவர்களது முடிவும் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது வழக்கம். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறை போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் வாழப்பாடி ராமமூர்த்திக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருந்த தொகுதியாக இருந்து வந்தது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்தத் தொகுதியில் இந்த முறை அதிமுகவும், காங்கிரஸும் மோதுகின்றன. 

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், கே.பி.முனுசாமி (அதிமுக), ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்), கணேச குமார் (அமமுக), ஸ்ரீ காருண்யா (மநீம), மதுசூதனன் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள்.

பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக - காங்கிரஸ் இடையே இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின்  முனுசாமி உள்ளூர் வேட்பாளர் என்பதும், செல்லக்குமார் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக எதிரொலிக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று கணிக முடியாத அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தத்தில் முக்கியத் தளபதியாக இருந்த கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண்கிறார். அவரை எதிர்த்துக் களம் காணும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லக்குமார் முதலிடத்தில் உள்ளார். சசிகலா குடும்பத்தை அதிகம் விமர்சித்து வந்த கே.பி.முனுசாமியைத் தோற்கடிக்கும் நோக்கில் அமமுக களப்பணியில் பாய்ச்சல் நிகழ்த்தியது. இருப்பினும் கருத்துக் கணிப்பில் கே.பி.முனுசாமி இரண்டாம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் கணேசகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மதுசூதனனும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT