அரக்கோணம்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி தொகுதியை இணைத்து உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதி அரக்கோணம்.

பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதி ஒரே ஜீவாதாரம் பாலாறு. இந்த நதி வறண்டு விட்டதால் விவசாயம் பொய்த்து விட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. அதேசயம் ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழில்கள் மட்டுமே நடைபெறுகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வேலை வாய்ப்புக்காக, அருகில் உள்ள மிகப்பெரிய நகரான சென்னைக்கு தொழில் தொழிலாளர்களாக செல்கின்றனர்.

தொழிலுக்காக தினந்தோறும் சென்னைக்கு பயணம் செய்வது இப்பகுதி மக்களின் வாழ்வில் அங்கமாகி விட்டது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இவர்கள் சென்னையையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ள இந்த தொகுதியில் பாமகவும் வென்றுள்ளது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

அரக்கோணம் (எஸ்சி)

சோளிங்கர்

திருத்தணி

ஆற்காடு

ராணிப்பேட்டை

காட்பாடி

தற்போதைய எம்.பி

ஹரி, அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சி வேட்பாளர் வாக்குகள்
அதிமுகஹரி 493534
திமுகஇளங்கோ 252768
பாமகவேலு 233762
காங்ராஜேஷ்56337

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1977அழகேசன், காங் வீரமணி, திமுக
1980வேலு, காங் ரகுநாதன், அதிமுக
1984ஜீவரத்தினம், காங் புலவர் கோவிந்தன், திமுக
1989ஜீவரத்தினம், காங்மூர்த்தி, திமுக
1991ஜீவரத்தினம், காங் கன்னையன், திமுக
1996வேலு, தமாகா ரவிராம், காங்
1998கோபால், அதிமுக வேலு, தமாகா
1999ஜெகத்ரட்சகன், திமுக கே.வி.தங்கபாலு, காங்
2004வேலு, பாமக சண்முகம், அதிமுக
2009ஜெகத்ரட்சகன், திமுக, வேலு, பாமக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

அரக்கோணம் (எஸ்சி) : ரவி, அதிமுக

சோளிங்கர் : பார்த்திபன், அதிமுக

திருத்தணி : நரசிம்மன், அதிமுக

ஆற்காடு : ஈஸ்வரப்பன், திமுக

ராணிப்பேட்டை : காந்தி, திமுக

காட்பாடி : துரைமுருகன், திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

ஏ.கே.மூர்த்தி (பாமக)

எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக)

பார்த்திபன் (அமமுக)

ராஜேந்திரன் (மநீம)

பாவேந்தன் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT