பெருமளவு கிராமப்புற பகுதிகளை கொண்ட இந்த தொகுதி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையும் உள்ளடக்கியது. குறிப்பிட்ட பகுதிகளில் விவசாயம் நடைபெறும் நிலையில் பலர் தொழிலாளர்களாக சென்னைக்கும், பெங்களூருக்கும் செல்லும் நிலை உள்ளது.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக புகாருக்கு ஆளாகி சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாது, ஏலகிரி மலைகளின் சிலப்பகுதிகளும் இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன.
திருபத்தூர் மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மாவட்ட தலைநகரின் பெயரில் திருவண்ணாமலை தொகுதியாக மாறியுள்ளது. முந்தைய திருப்பத்தூர் தொகுதி, பல ஆண்டுகளாக திமுக வலிமையாக இருந்த தொகுதி. திமுகவின் சார்பில் வேணுகோபல் பலமுறை வென்ற தொகுதி இது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை
கீழ்பெண்ணாத்தூர்
கலசபாக்கம்
திருப்பத்தூர்
செங்கம் (எஸ்சி)
தற்போதைய எம்.பி
வனரோஜா, அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
| அதிமுக | வனரோஜா | 500751 |
| திமுக | அண்ணாதுரை | 332145 |
| பாமக | எதிரொலி மணியன் | 157954 |
| காங் | சுப்பிரமணியன் | 17854 |
முந்தைய தேர்தல்கள்
திருப்பத்தூர்
| ஆண்டு | வென்றவர் |
| 1977 | விஸ்வநாதன், திமுக |
| 1984 | முருகையன், திமுக |
| 1984 | ஜெயமோகன், காங் |
| 1989 | ஜெயமோகன், காங் |
| 1991 | ஜெயமோகன், காங் |
| 1996 | வேணுகோபால், திமுக |
| 1998 | வேணுகோபால், திமுக |
| 1999 | வேணுகோபால், திமுக |
| 2004 | வேணுகோபால், திமுக |
திருவண்ணாமலை தொகுதி
2009 தனபால் வேணுகோபால், திமுக குரு, பாமக
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
திருவண்ணாமலை : ஏ.வ.வேலு, திமுக
ஜோலார்பேட்டை : கே.சி. வீரமணி, அதிமுக
கீழ்பெண்ணாத்தூர் : பிச்சாண்டி, திமுக
கலசபாக்கம் : பன்னீர்செல்வம், அதிமுக
திருப்பத்தூர் : நல்லதம்பி, திமுக
செங்கம் (எஸ்சி) : கிரி, திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
சி. என். அண்ணாதுரை (திமுக)
ஞானசேகர் (அமமுக)
அருள் (மநீம)
ரமேஷ் பாபு (நாம் தமிழர்)