பாண்டிச்சேரி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர்.

அக்கட்சியின் சார்பில் சண்முகம், பாரூக்,  நாராயணசாமி ஆகியோர் வென்ற தொகுதி. காங்கிரஸை தவிர திமுக, அதிமுக, பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி. கடந்த முறை காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் போட்டியட்டு வென்றது.

தற்போதைய எம்.பி

ராதாகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ்

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
என்.ஆர்.காங்ராதாகிருஷ்ணன்255826
காங்நாராயணசாமி194972
அதிமுகஓமலிங்கம்132657
திமுக  ஏ.எம்.எச்.நசீம்60580
பாமக  அனந்தராமன்22754
சிபிஐவிஸ்வநாதன்12709

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971மோகன் குமாரமங்கலம், காங்சேதுராமன், ஸ்தாபன காங்
1977அரவிந்த பால பஜனோர், அதிமுகஅன்சாரி துரைசாமி, ஸ்தாபன காங்
1980சண்முகம், காங்லட்சுமி நாராயணன், ஜனதா
1984சண்முகம், காங்திருநாவுக்கரசு, திமுக
1989சண்முகம், காங்மணிமாறன், திமுக
1991பாரூக், காங்  லோகநாதன்,  திமுக
1996பாரூக், காங்ஆறுமுகம், திமுக
1998ஆறுமுகம், திமுகசண்முகம், காங்
1999பாரூக், காங்ராமதாஸ், பாமக
2004ராமதாஸ், பாமக  லலிதா குமாரமங்கலம், பாஜக
2009நாராயணசாமி, காங்ராமதாஸ், பாமக

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2016 கட்சிகள் நிலவரம்:

காங்கிரஸ்:           15 இடங்கள்

என்.ஆர்.காங்கிரஸ்: 8

அதிமுக:           4

திமுக             2

சுயேச்சை          1

-----------------------------------

மொத்த இடங்கள்: 30

--------------------------------

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்)

வே. வைத்தியலிங்கம் (காங்கிரஸ்)

தமிழ்மாறன் (அமமுக)

சுப்பிரமணியன் (மநீம)

ஷர்மிளா பேகம் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT