மதுரை

கள நிலவரம்: மதுரை தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அமமுக சார்பில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை களத்தில் உள்ளார்.

மதுரை தொகுதியைப் பொறுத்தவரை ராஜன் செல்லப்பா இதனை ஒரு கவுரவ அடையாளமாகக் கருதுகிறார். மேலிடத்தில் போட்டிபோட்டு மகனுக்கு சீட் வாங்கியதால் காசை தண்ணீரைப் போல வாரி இறைத்து வாக்குகளைச் சேகரித்து வருகிறார். முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் என ராஜ்சத்யனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தாலும் மதுரையில் தடம் பதித்த ஆர்.பி.உதயகுமார் ஆதரவு காட்டாமல் ஒதுங்கியே நிற்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மதுரைக்கும் நீண்ட கால பந்தம் இருப்பதால் அதனை சு.வெங்கடேசன் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். ஆனால், களத்தில் அவருக்கு கூட்டணிக் கட்சியான திமுகவின் களப்பணி கைகொடுக்கவில்லை.

அமமுக கட்சி அதிமுகவின் வாக்குகளைப் பிரித்துவிடக்கூடாது என்பதால் வேட்பாளரின் பிரச்சாரத்தை பணபலத்தால் அதிமுக ஒடுக்கியதாகவும் தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அமமுகவோ ஆளுங்கட்சி நெருக்கடியாலேயே அடக்கி வாசிப்பதாக விளக்குகிறது. பழங்காநத்தம் பகுதியில் அமமுக வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டதாக முதற்கட்டத் தகவல்.

இன்னும் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காவிட்டாலும்கூட அதிமுக கடைசி இரண்டு நாட்களைக் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. 30 பேருக்கு ஒரு கட்சி ஆள் என நியமித்து பணப்பட்டுவாடாவுக்கு பட்டியல் எல்லாம் தயாராகிவிட்டதாம்.

தொகுதியில் உள்ள பெண்கள், எல்லாக் கட்சியினராலும் பணம் பெற்று வருகின்றனர். ஆரத்தி தட்டுகளுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை களைகட்டுகிறது.

கடைசி மூன்று நாட்களே ஓட்டு அதிமுகவுக்கா, திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கா என்பதைத் தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வி.வி.ஆர். ராஜ சத்யன் (அதிமுக)

சு.வெங்கடேசன் ( (சிபிஎம்)

டேவிட் அண்ணாதுரை (அமமுக)

அழகர் (மநீம)

பாண்டியம்மாள் (நாம் தமிழர்)

கள நிலவரப்படி மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசனும் அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரையும் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனும் போட்டியிடுவதால் வெற்றியைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. கருத்துக் கணிப்பின்படி,மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முதலிடத்தில் உள்ளார். அமமுகவின் டேவிட் அண்ணாதுரை 2-ம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் அதிமுகவின் ராஜ் சத்யன் உள்ளார்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

கள நிலவரப்படி மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசனும் அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரையும் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனும் போட்டியிடுவதால் வெற்றியைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. கருத்துக் கணிப்பின்படி,மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முதலிடத்தில் உள்ளார். அமமுகவின் டேவிட் அண்ணாதுரை 2-ம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் அதிமுகவின் ராஜ் சத்யன் உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT