திருவள்ளூர்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக தலைநகரை நோக்கி மக்கள் வந்தவண்ணம் இருப்பதால், சென்னையின் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. உயர்ந்து வரும் மக்கள் தொகையால், சென்னையில் தொகுதிகள் எண்ணிக்கை உயர்ந்தது. அவ்வாறு புதிதாக உருவான தொகுதி திருவள்ளூர்.

1950களில் திருவள்ளூர் பெயரில் மக்களவை தொகுதி இருந்துள்ளது. ஆனால் அப்போது இருந்த திருவள்ளூர் தொகுதியும், அதனுள் இருந்த சட்டப்பேரவை தொகுதிகளும், வேறானாவை. 2009-ம் ஆண்டு தனித்தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதி, சென்னை நகரின் சில பகுதிகளையும், புறநகர் பகுதிகளையும் கொண்டது.

இதில் இடம் பெற்றுள்ள கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம். இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் தொகுதி இது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

கும்மிடிபூண்டி

பொன்னேரி (எஸ்சி)

திருவள்ளூர்

பூந்தமல்லி (எஸ்சி)

ஆவடி

மாதவரம்

தற்போதைய எம்.பி

வேணுகோபால், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சி  வேட்பாளர்      வாக்குகள்
அதிமுகவேணுகோபால்628499
விசிகரவிக்குமார்305069
தேமுதிகயுவராஜ் 204734
காங்ஜெயகுமார்43960
சிபிஐகண்ணன்13794

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர் 2ம் இடம்
1951மரகதம் சந்திரசேகர், காங்கோவிந்தசாமி, சுயேச்சை
1951நடேசன், காங்   சரோஜனி, கேஎம்பிபுஇ
1956ஆர்.ஜி நாயுடு, காங்ராஜமன்னார், சுயேச்சை
1957கோவிந்தராஜூலு நாயுடு, காங்ராகவ ரெட்டி, சுயேச்சை
1962 கோவிந்தசாமி நாயுடு, காங்  கோபால், திமுக
2009வேணுகோபால், அதிமுக காயத்திரி,  திமுக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

கும்மிடிபூண்டி                : விஜயகுமார், அதிமுக

பொன்னேரி (எஸ்சி)      : பலராமன், அதிமுக

திருவள்ளூர்                   : ராஜேந்திரன், திமுக

பூந்தமல்லி (எஸ்சி)         : ஏழுமலை, அதிமுக

ஆவடி                           : பாண்டியராஜன், அதிமுக

மாதவரம்                       : சுதர்சனம், திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வேணுகோபால் (அதிமுக)

கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)

பொன்.ராஜா (அமமுக)

லோகரங்கன்  (மநீம)

வெற்றிச்செல்வி நாம் தமிழர்)

SCROLL FOR NEXT