அரக்கோணம்

கள நிலவரம்: அரக்கோணம் தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி என 6 தொகுதிகள் உள்ளடக்கிய அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவின் வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி, திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன், அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஜி.பார்த்திபன் என மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில், ஏ.கே.மூர்த்தி, ஜெகத்ரட்சகன், என்.ஜி.பார்த்திபன் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் ஈசான்ய மூலையான திருத்தணியில் இருந்து பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் சுற்று பிரச்சாரம் முடிந்த நிலையில் அதிமுக கூட்டணியின் பலம் இருந்தாலும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் பிரச்சார அணி சற்று மந்தமாகவே காணப்படுகிறது.

பட்டுவாடா முறையாக இல்லாததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் பிரதான கூட்டணியான தேமுதிகவும் மிஸ்ஸிங் என அடுக்கடுக்கான காரணங்களால் சற்று பின்தங்கியே காணப்படுகிறார்.  

திமுக வேட்பாளரின் தாராளத்தால் தொகுதிவாரியாக பிரச்சாரம் களை கட்டுகிறது. பாமகவின் வாக்கு வங்கியை குறிவைத்து திமுக வேட்பாளர் செயல்படுவதால் இன்றைய நிலையில் ஜெகத்ரட்சகன் களத்தில் சற்று முந்திக் காணப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் என்.ஜி.பார்த்திபனின் பிரச்சாரம் தனியாகச் செல்கிறது. அவர் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள கருத்துக் கணிப்பு முடிவுகள் - அரக்கோணம்

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், இது கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான பொதுவான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது என்பதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்பின்படி பாமக முதலிடம் வகிக்கிறது. ஜெகத்ரட்சகன் 2-ம் இடத்தில் உள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி.கோபாலின் மகனான என்.ஜி.பார்த்திபன் அமமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் அதிமுகவின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க சதவீதத்தைப் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT