கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதி இது. கேரளாவில் இருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் கேரள தொடர்புகள் அதிகம். தமிழகத்தின் மற்ற அரசியல் சூழ்நிலையில் இருந்து மாறுபட்டு கேரளாவை போன்ற சூழல் கொண்ட தொகுதி. மாநில கட்சிகளை விட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி.

காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது.

முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறை வென்றுள்ளன.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

நாகர்கோவில்

கன்னியாகுமரி

குளச்சல்

விளவங்கோடு

பத்மநாபபுரம்

கிள்ளியூர்

தற்போதைய எம்.பி

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
பாஜகபொன்.ராதாகிருஷ்ணன்   3,72,906  
காங்கிரஸ்வசந்தகுமார்2,44,244
அதிமுகஜான் தங்கம்1,76,239
திமுகராஜரத்தினம்     1,17,933
சிபிஎம்பெல்லார்மின்35,284
ஏஏபிசுப.உதயகுமார்   15,314 

முந்தைய தேர்தல்கள்

ஆண்டு  வென்றவர் 2ம் இடம்
1980டென்னிஸ் காங்பொன். விஜயராகவன் ஜனதா
1984டென்னிஸ் காங்பொன். விஜயராகவன் ஜனதா
1989  டென்னிஸ் காங்  குமாரதாஸ், ஜனதாதளம்
1991டென்னிஸ் காங்  முகமது இஸ்மாயில் ஜனதாதளம்
1996டென்னிஸ், தமாகாபொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜக
1998டென்னிஸ், தமாகாபொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜக
1999பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜகடென்னிஸ், காங்
2004பெல்லார்மின், சிபிஎம்பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக
2009ஹெலன் டேவிட்சன், திமுகபொன்.ராதாகிருஷ்ணன், பாஜக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

நாகர்கோவில்: சுரேஷ் ராஜன், திமுக

கன்னியாகுமரி: ஆஸ்டின், திமுக

குளச்சல்:       : பிரின்ஸ், காங்கிரஸ்

விளவங்கோடு  : விஜய தாரணி, காங்கிரஸ்

பத்மநாபபுரம்    : மனோ தங்கராஜ், திமுக

கிள்ளியூர்       : ராஜேஷ் குமார், காங்கிரஸ்

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)

ஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்)

லெட்சுமணன் (அமமுக)

எபினேசர் (மநீம)

ஜெயன்றீன் (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT