காங்கிரஸின் 'கை' சின்னம் ரத்தக்கறை படிந்த சின்னம் என, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர்.
பரமத்தி உள்ளிட்ட இடங்களில் இன்று (சனிக்கிழமை) மேற்கொண்ட பிரச்சாரத்தில் தம்பிதுரை பேசுகையில், "காங்கிரஸின் 'கை' சின்னம் ரத்தக்கறை படிந்த சின்னம். காவிரி தண்ணீர் கொடுக்காத சின்னம். இந்தச் சின்னத்திற்கு ஓட்டு போட்டால் காவிரியில் தண்ணீரும் வராது, தமிழக மக்கள் வாழவும் முடியாது. காவிரியில் தண்ணீர் வர வேண்டும் என்றால் 'இரட்டை இலை'யால் தான் முடியும். தமிழர்களை 'இரட்டை இலை'யால் தான் காப்பாற்ற முடியும்" என்று பேசினார்.