மற்றவை

இரு தரப்பினரும் ஆட்சேபம் செய்ததால் நீண்ட பரிசீலனைக்கு பிறகு தமிழிசை, கனிமொழி வேட்புமனுக்கள் ஏற்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோரது வேட்புமனுக்கள் நீண்ட பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி, பாஜக மாநில தலைவர் தமிழிசை, திரைப்பட இயக்கு நர் வ.கவுதமன் உள்ளிட்ட 62 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான பரிசீலனை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், மத்திய தேர்தல் பொது பார்வையாளர் சீமா ஜெயின் முன்னிலையில் காலை 11 மணிக்கு தொடங்கியது.

தமிழிசைக்கு எதிர்ப்பு

பாஜக வேட்பாளர் தமிழிசையின் வேட்புமனு பரிசீலனைக்கு வந்தபோது, திமுக முகவர்கள் சில ஆட்சேபங் களை தெரிவித்தனர். பாரத் பெட்ரோ லியம் நிறுவனத்தில் தமிழிசை தற்சார்பு இயக்குநராக, ஆதாயம் தரும் பதவியில் உள்ளார். இதனை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. மேலும், தனது கணவர் மருத்துவர் என குறிப்பிட்டுள்ள அவர், அவருக்கான வருமானத்தை குறிப்பிடவில்லை என புகார் கூறப்பட்டது.

கனிமொழிக்கும் எதிர்ப்பு

தொடர்ந்து, திமுக வேட்பாளர் கனி மொழி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பாஜக முகவர் கள் சில ஆட்சேபங்களை தெரிவித்த னர். கனிமொழி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஒரு இடத்தில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் சேப்பாக்கம் தொகுதியில் இருப்ப தாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இடத்தில் தூத்துக்குடி தொகுதியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது கணவரின் பான் எண் குறிப்பிடப் படவில்லை என புகார் தெரி வித்தனர்.

புகார்கள் தொடர்பாக இரு தரப்பினரும், விளக்கம் அளிக்க கால அவகாசம் அளித்து, பரிசீலனையை பகல் 1.30 மணிக்கு தேர்தல் அதிகாரி தள்ளிவைத்தார்.

பகல் 1.30 மணிக்கு தமிழிசையின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அவரது தரப்பினர், `பாரத் பெட்ரோலியம் தற்சார்பு இயக்குநர் பதவியை தமிழிசை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார் எனக் கூறி சான்று களை சமர்ப்பித்தனர். மேலும், மற்ற புகார்கள் தொடர்பாகவும் எழுத்துப் பூர்வ விளக்கத்தை அளித்தனர். நீண்ட பரிசீலனைக்கு பிறகு தமிழிசையின் வேட்புமனு ஏற்கப்படுவதாக அறி விக்கப்பட்டது.

தொடர்ந்து, கனிமொழியின் வேட்பு மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அவரது தரப்பினர் ஆஜராகி தேவை யான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து, கனிமொழியின் வேட்பு மனுவும் நீண்ட பரிசீலனைக்கு பின் ஏற்கப்பட்டது. இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட மொத்தம் 51 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் தள்ளு படி செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT