மற்றவை

காவிரியிலிருந்து குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது: தம்பிதுரை விமர்சனம்

செய்திப்பிரிவு

செந்தில் பாலாஜி ஒரு சின்னப் பையன் என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கரூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காகக் கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ''கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால், தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் கைச் சின்னத்துக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்தால் காவிரியில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். செந்தில் பாலாஜி ஒரு சின்னப் பையன்'' என்றார் தம்பிதுரை.

SCROLL FOR NEXT