திமுகவில் வாரிசு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது அவர்களின் விருப்பம். தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். குடும்பத்தினர், கட்சியினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பிரேமலதா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
''திமுகவில் வாரிசு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது அந்தக் கட்சியின் விருப்பம். இதைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? மக்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இறுதித் தீர்ப்பு. மக்கள்தான் எஜமானர்கள்.
மக்கள் முடிவே மகேசன் முடிவு
கூட்டணி ஒப்பந்தத்தில் ஏற்கெனவே தேமுதிக தலைவர் கையொப்பமிட்டுவிட்டார். எனவே அதிமுக தொகுதி அறிவிப்பின் போது, விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. மேலும் அதிமுக சார்பில், எங்களை அழைக்கவும் இல்லை.
தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்''.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.