மற்றவை

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்

செய்திப்பிரிவு

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பில் திமுக திருத்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகைப் பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் விருப்பத்தை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.    

SCROLL FOR NEXT