ஆந்திர மாநிலம் அமராவதியில் தமது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெலி கான்பரன்ஸ் முறையில் ஆலோ சனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை காண முடிகிறது. இந்த தேர்த லானது, தெலுங்கு தேச கட்சிக்கு மிக முக்கியமானதாகும்.
அதே சமயத்தில், இது மக்க ளுக்கும் முக்கியமான தேர்தல். ஆந்திராவில் இதுவரை செயல் படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங் கள் தொடர வேண்டுமானால், தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலை வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த நிலைக்கும்அவர்கள் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்) கீழே இறங்க தயங்க மாட்டார்கள்.
தற்போது, தன் மீதுள்ள அனைத்து வழக்குகளையும், சரிசெய்ய மோடியின் உதவியை ஜெகன்மோகன் ரெட்டி நாடியுள்ளார். இதற்காக, மோடியுடன் அவர் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு