வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதி

நெல்லை ஜெனா

வட தமிழகத்தின் ஆற்காடு பகுதியின் பண்பாட்டு பதிவுகளை தாங்கி நிற்கும் நகரம் வேலூர். பாலாற்றின் கரையில் வளர்ந்த நாகரீகத்தை பறைச்சாற்றி நிற்கும் வேலூர், சுதந்திர போராட்டத்திலும் முத்திர பதித்த நகரம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வேலூர் புரட்சி வரலாற்றில் முக்கிய பதிவாக திகழ்கிறது.

அரசியல் ரீதியாகவும் வேலூர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸுக்கு எதிராக திராவிட இயக்கம் வலிமையடைந்தபோது அதில் வேலூர் மிக முக்கிய பகுதியாக விளங்கியது. திராவிட இயக்கத் தலைவர்கள் பலரை தந்த பகுதி வேலூர்.

சமூக ரீதியாக குறிப்பிட்ட சமூக கட்டமைப்பை கொண்டிராமல், பல சமூகங்களும் வாழும் பகுதி இது. இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் முஸ்லிம் லீக் கூட்டணி பலத்துடன் பலமுறை களம் கண்ட தொகுதி இது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

வேலூர்

வாணியம்பாடி

ஆம்பூர்

அணைக்கட்டு

கே.வி.குப்பம் (எஸ்சி)

குடியாத்தம் (எஸ்சி)

தற்போதைய எம்.பி

செங்குட்டுவன், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகசெங்குட்டுவன்383719
பாஜகஏ.சி.சண்முகம்324326
முஸ்லிம் லீக்அப்துல் ரஹ்மன்205896
காங்விஜய் இளஞ்செழியன்21650

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971உலகநம்பி, திமுகமணவாளன், ஸ்தாபன காங்
1977தண்டாயுதபாணி, ஸ்தாபன காங்அப்துல்சமது, சுயேச்சை
1980அப்துல்சமது, சுயேச்சைதண்டாயுதபாணி, ஜனதா
1984ஏ.சி.சண்முகம், அதிமுகராமலிங்கம், திமுக
1989அப்துல்சமது, காங்அப்துல் லத்தீப், திமுக
1991அக்பர் பாஷா, காங்சண்முகம், திமுக
1996சண்முகம், திமுகஅக்பர் பாஷா, காங்
1998என்.டி.சண்முகம், பாமகமுகமது சாதிக், திமுக
1999என்.டி. சண்முகம், பாமகமுகமது அசீப், அதிமுக
2004காதர்முகைதீன், திமுகசந்தானம், அதிமுக
2009அப்துல் ரஹ்மான், திமுகவாசு, அதிமுக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

வேலூர் : கார்த்திகேயன், திமுக

வாணியம்பாடி : நிலோபர், அதிமுக

ஆம்பூர் : பாலசுப்பிரமணி, அதிமுக

அணைக்கட்டு : நந்தகுமார், திமுக

கே.வி.குப்பம் (எஸ்சி) : லோகநாதன், அதிமுக

குடியாத்தம் (எஸ்சி) : ஜெயந்தி பத்மநாபன், அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி)

டி.எம் கதிர் ஆனந்த் (திமுக)

பாண்டுரங்கன் (அமமுக)

சுரேஷ் (மநீம)

தீபாலட்சுமி (நாம் தமிழர்)

SCROLL FOR NEXT